BREAKING NEWS

டாக்டர் ராமதாஸ் பற்றி விமர்சனம் – தமிழிசையை கண்டித்து பா.ம.க போராட்டம்.

 

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து கூறி இருந்தார். இதற்கு பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது வருகிறார்கள்.

ஏற்கனவே சென்னையில் பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்தநிலையில் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து நேற்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை புறநகர் மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.




Leave a Reply