BREAKING NEWS

ஜோ ரூட் கேப்டன்சிக்கு சரிப்படமாட்டார் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் விமர்சனம்

ஓல்ட் ட்ராபர்ட் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தும் வழி தெரியாமலும் கமின்ஸ், ஹேசில்வுட் பந்துகளை சமாளிக்கும் வகை தெரியாமலும் தோற்றுப் போய் ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா 21 என்று தக்க வைத்ததையடுத்து ஜோ ரூட் கேப்டன்சி பறிபோய் விடுமோ என்ற கவலை தெரிவித்துள்ளார்.

2001க்குப் பிறகு இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா வெற்றிகரமாக ஆடிவருகிறது. பொதுவாக ஆஷஸ் தொடரை இழக்கும் கேப்டன்களின் இங்கிலாந்தில் சொற்பம்தான்.

இது தெரிந்ததால்தான் ஜோ ரூட், “கேப்டனாகத் தொடரவே விரும்புகிறேன். டெஸ்ட் அணியை வழிநடத்த எனக்கு ஒரு அருமையான சந்தர்ப்பத்தை அளித்துள்ளனர். எனவே தொடர்ந்து கடினமாக உழைத்து அதில் சிறப்புற விளங்க முயற்சி செய்வேன்.

ஆஷஸ் கோப்பையை இழப்பது ஜீரணிக்க மிகவும் கடினமானதுதான். மிகவும் கசப்பான ஏமாற்றமே. ஆனால் வீரர்கள் நிறைய தைரியத்தையும் உறுதியையும் காட்டி போராடினார்கள். ஒவ்வொருவரும் தங்கள் விக்கெட்டுகளுக்கு அதிக மதிப்பைக் கொடுத்து ஆடினர்” என்று கூறியுள்ளார்.

ஆனால் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல், ஜோ ரூட் கேப்டன்சிக்குச் சரிப்படமாட்டார் என்று விமர்சித்துள்ளார்.

“ஜோ ரூட்டை நான் எந்தப் பிரிவில் சேர்ப்பேன் என்றால், அவர் ஒரு பிற்போக்குத் தனமான கேப்டன். அவருக்கு ஆட்டம் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது என்ற உண்ர்வே இல்லை.

அதைவிடவும் முக்கியமானது அணி வீரர்கள் இவரைப்பார்த்து உத்வேகம் அடையமாட்டார்கள். இந்த டெஸ்ட் போட்டியில் பிராட் முதல் நாளில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதைத் தவிர்த்து இங்கிலாந்துக்கு மோசமான தினமானது. ஸ்டூவர்ட் பிராடைத் தவிர மற்றவர்கள் அன்று மோசமாக வீசினார்கள். முதல் 2 விக்கெட்டுகள் விழுந்த பிறகே ஓல்ட் ட்ராபர்ட் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து இறுகப் பற்றி இழுத்திருக்க வேண்டும்.

ஸ்மித்தை வீழ்த்தி பிற பேட்ஸ்மென்களுக்கும் ஆக்ரோஷமாக வீசியிருக்க வேண்டும். ஆனால் ரூட்டிடம் கேப்டனாக ஒரு உத்வேக தீப்பொறி இல்லை.

ஸ்மித், ஜோ ரூட்டை மொத்தமாக வீழ்த்தி விட்டார். ஆனால் ஜோ ரூட் தலை நரைக்காமல், வழுக்கை விழாமல் இருந்தது எப்படி என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” என்று கடுமையாக விமர்சித்தார்.




Leave a Reply