BREAKING NEWS

ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 90 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – முதல்வர், துணை முதல்வர் நடத்தி வைத்தனர்.


 

ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. சார்பில் நேற்று 90 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நடத்தி வைத்தனர்.

ஜெயலலிதா பிறந்தநாள்

தமிழகத்தின் மறைந்த முதல்வரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் பதவிவகித்தவர் ஜெயலலிதா. இவர், கடந்த 2016ம் ஆண்டு மரணம் அடைந்தார். இவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 24ந் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். இதனையடுத்து, இந்தாண்டு இவரது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சித் தொண்டர்களுக்கு உத்தரவிட்டனர்.

இலவச திருமணம்

இதனையடுத்து, கடந்த சில மாதங்களாகவே அவரது பிறந்தநாள் விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜமீல் சிட்டியில் நேற்று 90 ஜோடிகளுக்கு இலவச திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி இந்த விழாவுக்கு முன்னிலை வகித்தார். இந்த விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தனர்.

முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

மணமக்களுக்கு முதல்வரும், துணை முதல்வரும் தாலி எடுத்து வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர், மணமக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் இலவச சீர்களும் வழங்கப்பட்டது. மணமக்களை முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் வாழ்த்தினார். இந்த விழாவில், அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோர் பங்கேற்றனர்.




Leave a Reply