தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவின் வேதா நிலையம் ரூ.20 கோடியில் நினைவிடமாக மாறுகிறது….

‘‘நமது மாநிலம் 1969-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதியன்று ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, இந்த ஆண்டினை ‘தமிழ்நாடு பொன்விழா’ ஆண்டாக அரசு கொண்டாடி வருகிறது.
ஆளுநர் உரையில் ஏற்கனவே அறிவித்தபடி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் விதமாக மெரினா கடற்கரையில் நினைவு மண்டபம் 50.80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இத்துடன், ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’ என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 30 மாவட்டங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன. இந்த நூற்றாண்டு விழாக்களின் நிறைவாக, சென்னையில் மாபெரும் நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் துணை முதல்வர் தெரிவித்தார்.
Leave a Reply