BREAKING NEWS

ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத்தர தகுதி வழங்குவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்.


 

 

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகின் முன்னணி 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற போட்டியிடுவதற்காக இந்தியாவின் 3 அரசு பல்கலைக்கழகங்களுக்கும், 3 தனியார் பல்கலைக்கழகங்களும் உலகத்தர பல்கலைக்கழகங்கள் தகுதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இன்னும் தொடங்கப்படாத, முகவரி கூட இல்லாத, ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பல்கலைக்கழகத்துக்கும் இந்தத் தகுதி வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

ஜியோ பல்கலைக்கழகத்துக்கு முகவரி கூட இல்லாத நிலையில் அதற்கு உலகத்தரத் தகுதி எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது தான் கல்வியாளர்கள் எழுப்பும் வினா ஆகும். ஒரு கல்வி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட 18 விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு வகுத்துள்ளது. அதன்படி நிகர்நிலைப் பல்கலையாகவே தகுதி பெற முடியாத ஜியோ கல்வி நிறுவனம் எப்படி உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




Leave a Reply