ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் அறிமுகமாகும் புதிய வசதி

இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது ரகுபர்தாஸ் தமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல் குறித்து புது தில்லியில் வெள்ளியன்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

அதில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்றும், டிசம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:நவ.30 13 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல்டிச.7 2ஆம் கட்ட தேர்தல்டிச.12 3வது கட்ட தேர்தல்டிச.16 4ஆம் கட்ட தேர்தல்டிச.20 5ஆம் கட்ட தேர்தல்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

இந்நிலையில் இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.அதன்படி நாட்டிலேயே முதன்முறையாக வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு முறையில் வாக்களிக்கும் வசதி ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் அறிமுகம் செய்யபப்ட்ட உள்ளது.இதுவரை காவலர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மட்டும்தான் தபால் வாக்கு முறையில் வாக்களிக்கும் வசதி இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *