BREAKING NEWS

ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்குகிறார் தோனியின் அடுத்த திட்டம்

ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியில் இருக்கும் கிரிக்கெட் வீரர் தோனி, அங்கு கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தோனி, துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

தோனி, பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் ஆவார். இந்நிலையில் வரும் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை காஷ்மீரில் ராணுவ குழுவினருடன் தோனி ரோந்து பணிக்கு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி தோனி காஷ்மீரில் வீரர்களுடன் ராணுவ ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்க, அங்கு கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்க தோனி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த அகாடமியில் தோனி இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வழங்க உள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறையுடன் கலந்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.




Leave a Reply