BREAKING NEWS

ஜப்பானில் கனமழை- பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு


 

ஜப்பான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர் மழை காரணமாக பலவேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டு பொதுமக்களை பலி வாங்கி வருகிறது.

இந்நிலையில் மழை வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன 50-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.




Leave a Reply