தற்போதைய செய்திகள்
10901CNI_PRESIDENT_004

ஜனாதிபதி, பிரதமருடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு…..

புதுடெல்லி, ஜன.10-
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேசினார்.
ஆளுநர்
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவியேற்ற பின் முதல் முறையாக சட்டமன்றத்தில் உரையாற்றினார். கூட்டம் நிறைவடைந்ததும் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று மாலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார். அதன்பின்னர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்தார். அப்போது, பிரதமருக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
அரசியல்
மத்திய அரசுக்கு ஆளுநர் மாதந்தோறும் அறிக்கை அனுப்பி வைப்பது வழக்கம். ஆளுநர் பன்வாரிலால் எழுதிய அனுப்பி உள்ள அறிக்கையில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனின் அரசியல் செயல்பாடுகள் குறித்தும், ஆர்.கே நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது குறித்தும் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
மேலும் தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்த நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆளுநர் பிரதமரிடம் தமிழக அரசியல் நிலை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
Leave a Reply