தற்போதைய செய்திகள்
sonia-rahul1

‘சோனியா நலமாக இருக்கிறார்’ ‘டுவிட்டரி’ல் ராகுல் தகவல்

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நலமாக உள்ளார் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறி இருக்கிறார்.

உடல் நலக்குறைவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிம்லாவில் உள்ள மகள் பிரியங்கா வீட்டிற்குச் சென்று இருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடனடியாக அவர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு ஸ்ரீகங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

நலமாக இருக்கிறார்

சோனியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தாயார் உடல்நலம் குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் “சிம்லாவில் இருந்த சோனியா காந்திக்கு வயிற்று உபாதை ஏற்பட்டது. எனவே, அவரை டெல்லி அழைத்துவந்தோம். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சோனியா காந்தி நலமாக உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.




Leave a Reply