BREAKING NEWS

சோனியாகாந்தியுடன் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சந்திப்பு

ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. அல்கா லம்பா டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் சாந்தினி சௌக் எம்எல்ஏவாக அல்கா லம்பா உள்ளார். இவருக்கும், கட்சித் தலைமைக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து, கட்சித் தலைமையை அவர் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. அல்கா லம்பா டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். இதையடுத்து அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேரலாம் எனக் கூறப்படுகிறது.




Leave a Reply