BREAKING NEWS

சோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்

மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.மஹிந்திரா கே.யு.வி.100 இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சோதனையில் சிக்கிய கே.யு.வி.100 கார் பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.

ஸ்பை படங்களின் படி கே.யு.வி.100 மாடலின் பியூயல் டேன்க் மூடியில் பி.எஸ்.6 பெட்ரோல் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த மாடலில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.காரின் வடிவமைப்புகளில் வெளிப்புறம் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதில் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என தெரிகிறது. தற்போதைய கே.யு.வி.100 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இது 77 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *