தற்போதைய செய்திகள்

சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட எடப்பாடி தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் முதல்-அமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்….

சேலம்.

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. அந்த புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்து பேசியதாவது:சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்-அமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.

தேர்தல் நேரத்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறிதியை நிறைவேற்றும் விதமாக, எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. அந்த புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்து பேசியதாவது:
தூர்வாரும் பணி

ஜெயலலிதா வழியிலே இந்த அரசு செயல்பட்டு குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை துவக்கி, ஏரிகள், குளங்களில் இருக்கின்ற வண்டல்மண்ணை விவசாயிகளே அள்ளி அவர்களுடைய நிலத்திற்கு உரமாக பயன்படுத்தக்கூடிய திட்டத்தை அறிவித்து, அதன் மூலமாக, முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 1519 ஏரிகள் தூர்வாரப்பட்டு, இன்றைக்கு நிலத்தடி நீர் உயர்கின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

இன்றைக்கு சமுத்திரம் பகுதி பக்கத்தில் புதுப்பாளையம், கோணசமுத்திரம், கோவணம்பட்டி, மற்றும் கச்சுப்புள்ளி இந்த சுற்றுவட்டாரக் பகுதிகளையெல்லாம் பார்க்கின்றபொழுது, வறட்சியால் நிறைந்த பகுதி. நிலத்தடி நீர் நாளுக்கு நாள் வற்றிக் கொண்டிருக்கின்றன.

1000 அடிபோட்டால் கூட போரில் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலையில் இருக்கின்ற பகுதிக்கெல்லாம் நிலத்தடி நீரை உயர்த்தவேண்டும், அதற்காக குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை உருவாக்கி அதன் மூலமாக பருவமழை காரணமாக பெய்கின்ற மழைநீர் குளத்திலே, ஏரியிலே தேக்கப்படுவதால், நிலத்தடி நீர் உயருவதால் மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கின்றது.

கோரிக்கை

நிலத்தடி நீர் உயர்கின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி விவசாய பெருமக்களுக்குத் தேவையான நீர் கிடைக்கின்றது, குடிப்பதற்கான நீர் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை ஜெயலலிதாவின் அரசு உருவாக்கித் தந்திருக்கின்றது. இரண்டாம் திட்டப் பணிக்காக ஜெயலலிதாவின் அரசு இந்த ஆண்டு 331 கோடி ரூபாய் ஏரிகளை ஆழப்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கிராமங்களிலே வாழ்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற ஓடைகள், நதிகள் குறுக்கே தடுப்பணைகள் கட்டி, அதன் மூலமாக பருவகாலங்களிலே பெய்கின்ற மழைநீர் அங்கேயே தேக்கவைக்கப்பட்டு, நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு வேளாண் பெருமக்களுக்குத் தேவையான நீர் மற்றும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

அதற்காக மூன்றாண்டு திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, முதல் கட்டமாக அந்தப் பணியை துவங்க இருக்கின்றோம். நீர் மேலாண்மை மிக முக்கியம், ஏனென்றால் மழை குறைவாக பெய்கின்றது, பெய்கின்ற மழைநீரை சரியான முறையில் தேக்கி வைத்து நிலத்தடி நீரை உயர்த்துவது அரசிந்ன கடமை. அதற்காக அம்மாவினுடைய அரசு முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. எங்களுடைய பகுதிக்கு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டுமென்று குறிப்பிட்டீர்.

புதிய மருத்துவமனை

ஆகவே, உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுகின்ற விதமாக இன்றைக்கு உங்களுடைய பகுதியிலே ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்றைக்கு திறந்து வைத்திருக்கின்றோம். இதனால், சுற்றுவட்டாரத்தில் இருக்கின்ற சுமார் 20000 பொதுமக்கள் பயன்பெறுவார்கள். உழைக்கின்ற மக்கள் வெகுதூரம் சென்று சிகிச்சை செய்யமுடியாத ஒரு சூழ்நிலை இருக்கின்றதையெல்லாம் கருத்தில் கொண்டு உங்கள் பகுதியிலேயே ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை உருவாக்குகின்றபொழுது, அருகாமையில் இருக்கின்ற சமுத்திரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

ஜெயலலிதா ஆட்சியில்தான் அதிக அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் துவங்கப்பட்டிருக்கின்றது. ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட கிராமத்திலே வாழ்கின்ற மக்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை கிராமப்புறத்திலே துவக்கி அதன் மூலமாக ஏழை மக்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கக்கூடிய சூழ்நிலையை அம்மாவினுடைய அரசு உருவாக்கித் தந்திருக்கின்றது.

விலையில்லா மின்சாரம்

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அங்கே இருக்கின்ற மக்கள், இந்த சொசைட்டிக்கு பின்னாலே நிலம் இருக்கிறது, அங்கேயே ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் கட்டவேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள், அதுவும் நிறைவேற்றித் தரப்படும். இங்கே ஒரு ஏக்கர் நிலம் எடுத்து, கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அருமையான சுகாதார நிலையம் கட்டிக் கொடுத்து, உங்களுடைய தேவைகளை ஜெயலலிதாவின் அரசு பூர்த்தி செய்யும்.

இன்றைக்கு விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை ஜெயலலிதாவின் அரசு அறிவித்து வருகின்றது. நம்முடைய தொகுதியை பொறுத்தவரைக்கும், விவசாயம், விசைத்தறி, கைத்தறி இந்த மூன்றுதான் பிரதான தொழிலாக இருக்கிறது. ஆகவே, ஜெயலலிதா இருந்தபொழுதே, விசைத்தறிக்கும், கைத்தறிக்கும் மானிய விலையில் மின்சாரம் வழங்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இந்தியாவிலேயே எந்தவொரு மாநிலத்திலும் மானிய விலையில் விலையில்லா மின்சாரம் கொடுக்கின்ற மாநிலம் கிடையாது.

100 யூனிட் மின்சாரம்

தமிழகத்தில்தான் விசைத்தறி மற்றும் தொழிலாளர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் விலையில்லா மின்சாரம் கொடுக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான், வேறு எங்கும் கிடையாது. அதுமட்டுமல்லாமல் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக தந்து கொண்டிருக்கின்றோம். வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற திட்டத்தை அமல்படுத்தவில்லை. ஏழை, எளிய மக்களுடைய நிலையை புரிந்துகொண்டு, அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து, அந்த தேவையை பூர்த்தி செய்து, அவர்களை வாழவைக்கும் அரசு ஜெயலலிதா அரசு.

ஜெயலலிதா அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி, மக்களுக்கு தேவையான நலன்களை செய்துகொண்டிருக்கின்றது. இந்தியாவிலேயே நம்முடைய மாநிலத்தில்தான் பெண்களுக்கான திருமண உதவித் திட்டம், இன்றைக்கு ரூபாய் 27 ஆயிரம், ரூபாய் 50 ஆயிரம், 1 பவுன் தங்கம் ஜெயலலிதாவின் அரசு தந்து கொண்டிருக்கின்றது.

பெட்டகம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு காலத்தில், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ரூபாய் 6 ஆயிரம் கொடுக்கப்பட்டதை, ஜெயலலிதா ரூபாய் 12 ஆயிரமாக உயர்த்தி, பின்னர் அதை ரூபாய் 18 ஆயிரமாக உயர்த்தி, அதில் ரூபாய் 4 ஆயிரத்திற்கு 16 வகையான பொருட்களை உள்ளடக்கி அம்மா தாய், சேய் நலப் பெட்டகம் என்று ஏழை தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்காக இரண்டு உறை, 12-வது வாரம், 16-வது வாரத்தில் கொடுக்கின்றோம்.

குழந்தைகள் பிறக்கும்பொழுது எல்லாவிதத்திலும் சரியாக இருக்கின்றது, ஆனால் எடையில் மட்டும் குறைபாடு இருக்கின்றது, அந்த குறைபாட்டையும் தீர்க்க வேண்டுமென்பதற்காக 12-வது, 16-வது வாரத்தில் சத்தான பொருட்கள் கொடுப்பதற்காக, 16 வகையான பொருட்களை உள்ளடக்கி அம்மா தாய், சேய் நலப் பெட்டகம் என்று பெயரிட்டு ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து வழங்கவிருக்கின்றோம்.

பரிசு பெட்டகம்

குழந்தைகள் பிறக்கும்பொழுதே நல்ல எடையுடன் பிறந்தால்தான் நோய்நொடியில்லாமல் இருக்க முடியும். ஏழைத் தாய்மார்கள் பெற்றெடுக்கின்ற குழந்தைகள் 16 வகையான பொருட்களை உள்ளடக்கிய இந்த பரிசு பெட்டகத்தை பெறுகின்றது, இந்தியாவிலேயே இந்த திட்டம் எங்கேயும் கிடையாது, ஜெயலலிதாவின் அரசு தான் வழங்குகின்றது.

ஜெயலலிதா ஆட்சியில் தான் நிறைய திட்டங்களை கொடுத்திருக்கின்றோம். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கி விவசாய பெருங்குடி மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருக்கின்றது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி நான் இந்த சமுத்திரத்திற்கு முதலமைச்சராக வந்து, ஆரம்ப சுகாதார நிலையத்தை திறப்பதற்குண்டான ஒரு பாக்கியத்தை நீங்கள் எனக்கு தந்திருக்கின்றீர்கள். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Leave a Reply