BREAKING NEWS

செல்போனில் வேண்டாத அழைப்புகள் – டிராய் விளக்கம்.


 

வேண்டாத வணிக அழைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய விதிமுறைகள் எந்தவொரு நிறுவனத்தையும் குறிவைத்து உருவாக்கப்படவில்லை என்று தொலைத் தொடர்பு ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

குறுஞ்செய்திகள்

பொதுமக்களுக்கு மொபைல் போன் வாயிலாக, வேண்டாத வணிக அழைப்புகளால் தொல்லைகள் உண்டாவது வழக்கம். இதுபோன்ற வேண்டாத அழைப்புகளிலிருந்து மக்களுக்கு விடுதலையளிக்கும் வகையில், தேவையில்லாத அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை டிராய் அண்மையில் கடுமையாக்கியது.

வேண்டாத வணிக அழைப்புகள் சார்ந்த பிரச்சினையைச் சரிசெய்யத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தவறும்பட்சத்தில், மாதத்துக்கு ஒரு விதிமீறலுக்கு ரூ.1,000 முதல் ரூ.50 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படும்.

வணிக அழைப்பு

தேவையில்லாத அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை முடக்குவதற்கான அமைப்புகளை நிறுவுமாறு தொலைத் தொடர்பு நிறுவனங்களை டிராய் கேட்டுக்கொண்டது. மேலும், வணிக அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்களின் ஒப்புதலைப் பெறுமாறு தொலைத் தொடர்பு நிறுவனங்களை டிராய் அறிவுறுத்தியது.

இந்நிலையில், புதிய ஒழுங்குமுறைகள் எந்தவொரு தனிப்பட்ட நிறுவனத்தையும் குறிவைத்து உருவாக்கப்படவில்லை என்று டிராய் தலைவர் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர்

இது குறித்து டிராய் தலைவரான ஆர்.எஸ்.சர்மா தனது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக டுவிட்டர் வாசிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், “இந்த ஒழுங்குமுறைக்கும், எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கும் சம்பந்தமில்லை. இந்தச் சூழ்நிலை தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

புதிய ஒழுங்குமுறையின்படி, ஒரு ஸ்மார்ட்போனை நான் பயன்படுத்துகையில், எனக்கு ஒரு வேண்டாத அழைப்போ அல்லது குறுஞ்செய்தியோ வந்தால், அதுகுறித்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகாரளிப்பதற்கான வசதிகள் எனக்கு வழங்கப்பட வேண்டும். இதற்கும், குறிப்பிட்ட எந்தவொரு நிறுவனத்துக்கும் தொடர்பில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.




Leave a Reply