BREAKING NEWS

செல்போனில் தாமாக பதிவான ஆதார் உதவி எண் விவகாரம் –  கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டது.

 

 

ஸ்மார்ட் போன்களில்

ஆதார் ஆணையத்தின் உதவி எண் ‘1800-300-1947′ தாமாக செல்போன்களில் பதிவானதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளார்கள் டுவிட்டரில் புகார் தெரிவித்து வந்தனர்.

ஆதார் ஆணையத்தின் உதவி எண்ணை எனது அனுமதி இல்லாமல் எனது செல்லிடப்பேசியில் பதிவிட முடிந்தால், எனது செயல்களை கண்காணித்து, தகவல்களை சேகரிக்க முடியாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்ற வகையில், அவர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆதார் ஆணையம் மறுப்பு

ஆனால், ஆதார் ஆணையம் இதற்கு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-

“ஆதார் ஆணையத்தின் பயன்பாட்டில் இல்லாத பழயை உதவி எண் செல்லிடப்பேசியில் தாமாக பதிவானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

குழப்பம் ஏற்படுத்த

ஆதார் ஆணையம் சார்பாக எந்த ஒரு செல்போன் தயாரிப்பு நிறுவனத்திடமோ அல்லது தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்திடமோ இதுபோன்ற வசதியை இணைக்குமாறு அறிவுறுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

செல்போனில் பதிவான உதவி எண் என குறிப்பிடப்படும் ‘18003001947’ ஆதார் ஆணையத்தின் சரியான இலவச அழைப்பு எண் அல்ல. மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த செயல்களை செய்துள்ளனர்.

சரியான அழைப்பு எண்

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் ஆதார் ஆணையத்தின் சரியான இலவச அழைப்பு எண் ‘1947′ ஆகும்.

பொதுச் சேவை எண்கள் பட்டியலில் ‘18003001974’ அல்லது ‘1947’ என்ற எண்களை இணைக்குமாறு எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனத்திடமோ அல்லது செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனத்திடமோ ஆதார் ஆணையம் சார்பில் வலியுறுத்தப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கூகள் விளக்கம்

இந்த நிலையில், ஆதார் உதவி எண்கள் ஆன்ட்ராய்டு மொபைல் போன்களில் பதிவானதற்கு ஆன்ட்ராய்டு இயங்குதளமே காரணம் என்று கூகுள் விளக்கம் அளித்துள்ளது.

2014ம் ஆண்டு உடாய் சேவை எண்ணும், பேரிடர் உதவி எண்ணும் ஆன்ட்ராய்டு இயங்கு தளம் ஸ்டெப்அப் ஜிசார்ட்டில் தவறுதலாக கோடிங் செய்யப்பட்டுவிட்டது.

மன்னிப்பு கேட்டது

தற்போது வரை இந்த கோடிங் நீக்கப்படாததால், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஆன்டிராய்ட் செல்போன்களில் இவ்விரு எண்களும் தாமாகவே பதிவாகிவிடுகிறது.

இதற்காக மன்னிப்புக் கோரியுள்ள கூகுள், ‘‘பயனாளர்களின் ஆன்ட்ராய்டு கருவிகளில் அங்கீகரிக்கப்படாத எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை’’ என்றும், ‘‘விரைவில் இந்த பிரச்னை சரி செய்யப்படும்’’ என்றும் தெரிவித்துள்ளது.




Leave a Reply