தற்போதைய செய்திகள்

சென்னை மாநகராட்சி பள்ளிகள் 88.79 சதவீதம் தேர்ச்சி மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை மாநகராட்சி பள்ளிகள் 88.79 சதவீதம் தேர்ச்சி
மாநகராட்சி ஆணையர் தகவல்


சென்னை, மே 16-

12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சென்னைப் பள்ளிகளில் 88.79 சதவீத தேர்ச்சி மற்றும் 3 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளன என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறை சார்பில் சென்னை மேல்நிலைப்பள்ளிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற அரசு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2199 மாணவர்கள், 3589 மாணவியர்கள் என மொத்தம் 5788 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள்.

.5 சதவீதம் அதிகம்

இவர்களில் 1782 மாணவர்கள், 3357 மாணவியர்கள் என மொத்தம் 5139 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 88.79 ஆகும். கடந்த ஆண்டை விட .05 சதவீதம் அதிகமாகும். 200க்கு 200 மதிப்பெண்களை 69 மாணவ, மாணவிகளும், 1,100க்குமேல் மதிப்பெண்களை 74 மாணவ மாணவிகளும், 1000க்கும் அதிகமான மதிப்பெண்களை 326 மாணவ மாணவிகளும் பெற்றனர்.

ஆணையர் வாழ்த்து

12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் துணை ஆணையர் (கல்வி) மகேஸ்வரி ரவிக்குமார் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

—–

பாக்ஸ்

3 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி(பாக்ஸ்)

—–

12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நேற்று வெளியிடப்பட்டது. இதில், சென்னை மாநகராட்சியின் 3 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. அவை வருமாறு: சென்னை மேல்நிலைப்பள்ளி, கோயம்பேடு; சென்னை மேல்நிலைப்பள்ளி, சுப்புராயன்;சென்னை மேல்நிலைப்பள்ளி, சி.ஐ.டி. நகர்.
Leave a Reply