BREAKING NEWS

சென்னை மடிப்பாக்கம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்.

 

நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலையத்தில், கடந்த 2014ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் விஜயகுமாரி. தற்போது பதவி உயர்வு பெற்று சென்னை மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர், பணகுடியில் பணியாற்றியபோது வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த 10க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு முக்கிய சாட்சியாக இருந்து வந்தார். இந்நிலையில் பணகுடி காவல் நிலைய குற்ற வழக்கு எண் 359/2014 வழக்கு விசாரணையை மூன்று மாத காலத்திற்குள் நடத்தி முடிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக அப்போது பணியாற்றிய விஜயகுமாரிக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையால் பிறப்பிக்கப்பட்ட ஆணையை அவமதித்ததற்காக விஜயகுமாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

——-




Leave a Reply