BREAKING NEWS

சென்னை நகரம் சிங்கப்பூர் போல மாற 1,000 ஆண்டுகளாகும்

சிங்கப்பூரை போல சென்னை மாற ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்றும் ஆனால் அப்போது 10 ஆயிரம் ஆண்டுகள் சிங்கப்பூர் முன்னோக்கி சென்றுவிடும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.நீதிமன்றத்தில் வழக்குஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச்செயலாளரும், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் சி.பி.ஐ. விசாரணையில் இடம் பெற்றிருந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருமான மோகன்ராஜ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தார்.

அதில் தொலைபேசி இணைப்புகளுக்காக சாலையை தோண்டிவிட்டு, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவராதது குறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்க தமிழக உள்துறை செயலாளருக்கும், சென்னை போலீஸ் கமி‌ஷனருக்கும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் 2001 முதல் சென்னையில் தோண்டப்பட்ட சாலைகள் முழுமையாக சீரமைத்து தராததால், பள்ளத்தில் விழுந்தும், அதில் தேங்கிய நீரில் சிக்கியும் பலர் காயமடைந்து இருப்பதாகவும் சிலர் மரணம் அடைந்து இருப்பதாகவும், அது தொடர்பாக எஸ்பிளனேடு, மயிலாப்பூர் போலீஸ் நிலையங்களில் அளித்த புகார்களில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

நீதிபதிகள் அதிருப்திஇந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே மோசமான சாலைகளை கண்டறியவும், மழை நீர் வடிகால் கட்டமைப்பை ஆராயவும் இரண்டு வெவ்வேறு வழக்கறிஞர்களை ஆணையர்களாக நியமித்துள்ளதாக அரசு தெரிவித்தது. மேலும் 2015-ல் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு மீண்டும் ஏற்படாது என சென்னை மாநகராட்சி உறுதி அளித்தது.

இதனையடுத்து 80 சதவீத மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு விட்டது என்பது குறித்த தகவலை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள் மோகன்ராஜ் வழக்குடன், மழை நீர் வடிகால் பராமரிப்பு வழக்கையும், சாலை பராமரிப்பு வழக்கையும் சேர்த்து விசாரிக்கவும் முடிவு செய்தனர்.

சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் மோசமான நிலையிலேயே பராமரிக்கப்படுவது குறித்தும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். தற்போதைய பருவமழை காலம் முடியும் வரை சாலைகள் செப்பணிடப் போவதில்லை என்றும் இதே நிலையில் போனால் தற்போதைய சிங்கப்பூரை போல சென்னை மாற 1,000 ஆண்டுகள் ஆகும். ஆனால் அப்போது 10,000 ஆண்டுகள் சிங்கப்பூர் முன்னோக்கி சென்றுவிடும் என தெரிவித்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *