BREAKING NEWS

சென்னை துறைமுகம் – மணலி சி.பி.சி.எல்., நிறுவனத்திற்கு கடற்கரை வழியாக கச்சா எண்ணெய் எடுத்து செல்ல எதிர்ப்பு – கடலோர சுற்றுச்சூழல் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி மத்திய அரசு நிறுவனமான சி. பி. சி. எல். நிறுவனத்திற்கு கடற்கரை வழியாக புதிய எண்ணெய் குழாய்கள் பதித்து கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர சுற்றுசூழல் பாதுகாப்பு குழுவினர் 29 வது முறையாக கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான, மணலியில் உள்ள, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், தார் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களை தென் மாநிலங்களுக்கு அனுப்பி தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

கடற்கரை வழியாக

சி.பி.சி.எல்.நிறுவனத்திற்கு தேவையான கச்சா எண்ணெய் வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு குழாய்கள் மூலம், ராயபுரம், காசிமேடு, தண்டையார்பேட்டை, ஐ.ஓ.சி பகுதிகளில் குடியிருப்பு வழியாக, மணலியில் உள்ள சி. பி. சி. எல் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

குழாய்களில் விரிசல்

இந்நிலையில், இந்த குழாய்கள், பதிக்கப்பட்டு 48 ஆண்டுகள் ஆனதால், அடிக்கடி எண்ணெய் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு கசிவு ஏற்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் முழுவதும் எண்ணெய் கலந்து வருகிறது. இதனால், எண்ணெய் நிறுவனம் ரூ. 248 கோடி செலவில் சென்னை துறைமுகத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தூரம் வரை பூமிக்கடியில், 5 அடி ஆழத்தில், 2.5 அடி சுற்றளவு உடைய, குழாய்களை பதிக்க, சி. பி. சி. எல். நிறுவனம் திட்டமிட்டு கடற்கரையோரமாகவே துறைமுகத்தில் இருந்து காசிமேடு, திருவொற்றியூர், எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் வழியாக, மணலி ஆலையை சென்றடையவதற்காக பணிகள் தொடங்கி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.

வாழ்வாரம்

இந்த நிலையில் கச்சா எண்ணெய் படலத்தால் கடல்வாழ் உயிரினங்களும், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கபட்டுள்ள நிலையில் மீண்டும் குழாய்களினால் ஏற்படும் கசிவினால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதனால் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை கடலோர சுற்றுசூழல் பாதுகாப்பு குழுவினர் தலைவர் கோ.சு மணி. த. மா. கா. மாநில செயலாளர் சுகுமாரன், ஆம்ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன் த. மா. கா. பகுதி தலைவர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் 29- வது முறையாக நேற்று காலை திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்




Leave a Reply