தற்போதைய செய்திகள்
rajini

சென்னை திரும்பிய ரஜினி பேட்டி:”என் பின்னால் பாஜக இல்லை; மக்களும் கடவுளும் உள்ளனர்…..

சென்னை,
என் பின்னால் பா.ஜ.க இல்லை கடவுளும், மக்களும் தான் உள்ளனர் என்று இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அரசியல்

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் இமயமலை, தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிகப் பயணம் சென்றார் ரஜினிகாந்த்.

கடந்த 10-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் சிம்லாவுக்குச் சென்றவர், அங்கிருந்து ெரயில் மற்றும் கார் மூலம் மற்ற இடங்களுக்குப் பயணித்தார். மேலும், மலைப்பாதையில் நடைபயணமும் சென்றார். இந்நிலையில், 10 நாட்களுக்குப் பிறகு நேற்று மதியம் 2 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

ஆன்மிக பயணம்

இதையடுத்து போயஸ் தோட்டம் வந்த ரஜினியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அப்போது, அவர் கூறியதாவது:

ஆன்மிக பயணம் சென்று வந்தது மனதிற்கு புத்துணர்ச்சி அளித்திருக்கிறது. 16 மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது என்றார்.

ராமர் ரத யாத்திரை குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, ரத யாத்திரை என்பது மத கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் போலீசார் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு தடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் பின்னால் பா.ஜ.க இல்லை கடவுளும், மக்களும் தான் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Leave a Reply