BREAKING NEWS

சென்னையில் ரூ.85 கோடி செலவில் கண்காணிப்பு கேமரா –  காவல் ஆணையர் தகவல்.

 

ரூ.85 கோடி செலவில் கண்காணிப்புக் கேமராக்கள் சென்னையில் விரைவில் பொருத்தப்பட உள்ளதாக சென்னை ஏ.கே. விசுவநாதன் கூறினார்.

கண்காணிப்புக் கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை அண்ணா நகர் டவர் பார்க் அருகே நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே. விசுவநாதன் கூறியதாவது:-

கண்காணிப்பு கேமரா

கண்காணிப்பு கேமரா குற்றங்களை கண்டறிய மட்டுமின்றி, குற்றங்களைத் தடுக்கவும் பேருதவி செய்கிறது.

எனவே பொதுமக்கம் குற்றங்களை தடுக்க தங்களது வீடுகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முயற்சிக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா காவல்துறையின் மூன்றாவது கண்ணாக உள்ளது.

துப்பு துலக்க முடியாத வழக்குகளிலும், சவாலான வழக்குகளிலும் கண்காணிப்புக் கேமரா மூலமே குற்றவாளிகளைப் பற்றிய தடயங்கள் போலீசாருக்கு கிடைக்கிறது. சென்னையில் தொடர்ச்சியாக வழிப்பறியில் ஈடுபட்ட ஈரானியக் கொள்ளையர்களை அண்மையில் பிடிக்க கண்காணிப்பு கேமராவே உதவியது.

ரூ.85 கோடி

சென்னையில் காவல் துறை சார்பில் ரூ.85 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளது. இதற்காக சென்னை எம்.பி.கள் தங்கள் நிதியில் இருந்து ரூ.3 கோடி தருவதாகக் கூறி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையர் எச்.எம். ஜெயராமன், இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை ஆணையர்கள் சிவக்குமார், எம்.சுதாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.




Leave a Reply