BREAKING NEWS

சென்னையில் புயல் காற்றுடன் கனமழை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி.


 

சென்னையில் கடந்த சில நாட்களாக புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு

கேரளாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிரமடைந்தது. இதனால், கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இதனால், கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க அந்த மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டார். இதையடுத்து, தற்ேபாது தமிழகத்துக்கு கபினி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 5000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை

இந்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதன்படி, கடந்த மாதத்தில் தென்தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாகவே கனமழை பெய்கிறது. குறிப்பாக, கடந்த மூன்று நாட்களாக சென்னையில் மாலை நேரத்தில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் கனமழை

இந்த மழையினால் மாலை நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்புவோர், வாகன ஓட்டிகள், பயணிகள் உள்ளிட்டோர் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும், தி.நகர், ஜாம்பஜார், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, வடபழனி, போரூர், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளின் நடைபாதை வியாபாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்ட்டிரா மாநிலத்தில், மும்பையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மும்பை வெள்ளத்தில் சிக்கி, மின்சார ரெயில், பேருந்து மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply