BREAKING NEWS

சென்னையில் நீர்நிலைகளை அழிக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் – அதிர்ச்சி தகவல்கள்.

 

 

பருவமழை

சென்னையின் நீர்நிலைகளை பிளாஸ்டிக் குப்பைகள் அழித்து வருகின்றன. நதிகளில் மிதக்கிறது, கழிவுநீர்ப்பாதைகளை அடைக்கிறது, ஏரிகளில் ஊடுருவ முடியா திரையை உருவாக்கியுள்ளது, மீன்கள் மூச்சுத் திணறிச் சாகின்றன, இந்த நீரைக் குடிக்கும் விலங்குகள் மடிகின்றன. மனிதர்களுக்கும் நோய் பரவுகிறது

பருவமழைக் காலத்தில் மழைநீரை வடிகால்களான நீர்நிலைகளில் வணிக நிறுவனங்கள் கொண்டு குவிக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் ஏராளம். நதிகளுக்கு கழிவுநீரைக் கொண்டு செல்லும் சட்டவிரோத கழிவுநீர்ப்பாதைகள் மூலம் பிளாஸ்டிக் குப்பைகள் குவிகின்றன.

குடியிருப்பு

நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்போரும் குப்பைகளைக் கொட்டி குவிக்கின்றனர். கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் கால்வாய் இதற்கு உதாரணம். இந்தக் கால்வாயில் அங்கு குடியிருப்போர் நாளொன்றுக்கு சுமார் 10 டன்கள் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுகின்றனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இது ராஜமன்னார் சாலையையும் அடையார் ஆற்றையும் இணைப்பதாகும். பெரம்பலூர் ெரயில் நிலையம் அருகேயுள்ள எகாங்கிபுரம் கால்வாயில் ஏகப்பட்ட குப்பைகள் கொட்டப்படுவதும் மாநகராட்சி மற்றும் குடிமை அமைப்புகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. “மழைநீர் கால்வாய்களில் 30% பிளாஸ்டிக் குப்பைகள் அடைந்து கிடக்கின்றன” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மழை நீர்

பேரழிவு மேலாண்மை நிபுணர் என்.மாதவன், மழைநீர் செல்லும் பாதைகளில் பிளாஸ்டிக் குப்பைகளின் அடைவுதான் பருவமழைக் காலக்கட்டத்தில் 471 பேருந்து வழித்தடங்களில் வெள்ளநீர் சேகரிப்புக்குப் பிரதான காரணமாகும் என்கிறார். இதற்கு ஒரு தெளிவான உதாரணம், “பிராட்வேயில் தேக்கநிலைக்கு மழைநீர்ப்பாதைகள் பிளாஸ்டிக் குப்பைகளால் அடைக்கப்பட்டதே காரணம்” என்றார்.

நகரின் உள்பகுதியிலும் நகரின் சுற்றுப்புறப் பகுதிகளிலும் உள்ள நீர்வழிப்பாதைகளிலும் கூட பிளாஸ்டிக் குப்பைகளைக் கொட்டுவதுதான் நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக குப்பைகளை மலைபோல் குவிக்கும் பகுதியாகவே மாறிவிட்டது என்று இந்தியச் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் அருண் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். “பாலித்தீன் பைகள் முதல், காலணிகள், பயன்படாத பிளாஸ்டிக் பர்னிச்சர்கள் என்று அனைத்து வகையான குப்பைகளும் உள்ளன” என்கிறார்.

சுகாதாரக் கேடு

இவற்றில் 90% பிளாஸ்டிக் மற்றும் பாலிமர்களாகும். கொட்டப்பட்ட குப்பைகளிலிருந்து கரைசல்நீர் பிரச்சினையும் உள்ளது. இதனால் நிலம் மற்றும் நீர் தரநிலைகள் எதிர்மறையாகத் தாக்கப்படுகின்றன. இதனால் கடும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது, மேலும் இதனால் நீரைப் பயன்படுத்த முடியாத விரயமாகிறது.

ஒரு கட்டத்தில் நீர்நிலைகள் பிளாஸ்டிக் குப்பைகளினால் சரி செய்ய முடியாத நிலைக்கு தாழ்ந்து விடுகிறது. நீர்நிலைகளில் மேற்பரப்பை ஆக்ரமிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளினால் நீர்நிலைகளே மரணித்து விடுகிறது.

நீர்த்தாவரங்கள்

சுற்றுச்சூழல் நிபுணர் சுல்தான் அகமது இஸ்மாயில் கூறுவதன்படி, பிராணவாயு அளவு குறைவதால் நீர் உயிரிகள் பலியாகின்றன. நீர்த்தாவரங்கள் இறந்துபடுகின்றன.

இதற்குத் தீர்வு என்ன என்று இஸ்மாயில் கூறும்போது, “நம் சமூகம் பேக்கிங்கிற்கு இலையால், சருகால் செய்யப்படும் தொன்னைகளைப் பயன்படுத்தியது வழக்கமானதுதான். பிளாஸ்டிக்குகளை மறு சுழற்சி செய்யும் சிஸ்டம் தேவை” என்கிறார்.

மறுசுழற்சி

தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் பி.சுவாமிநாதன் கூறும்போது, “கொட்டப்படும் மற்றும் நீர்நிலைகளுக்குச் செல்லும் 7% பிளாஸ்டிக் குப்பைகளில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 1% மட்டுமே மற்றவையெல்லாம் பிஸ்கட், சாக்லெட் கவர்கள், காஸ்மெடிக் டியூப்கள், ஷாம்பூ, எண்ணெய் சாஷேக்கள் ஆகியவையே பெரும்பங்கு வகிக்கின்றன.

மறுசுழற்சி வசதிக்காக பிளாஸ்டிக் தொழிற்துறையினர் அரசுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கின்றனர். நமக்குத் தேவைப்படுவதெல்லாம் நிலம் மற்றும் குப்பைகளை சேகரித்து செய்யும் ஒரு முறைசார்ந்த நடவடிக்கையே” என்கிறார்.
Leave a Reply