BREAKING NEWS

சென்னையில் நடைபெறும் பழமையான கார் கண்காட்சி ஞாயிற்றுக் கிழமை நடக்கிறது.


 

சென்னையில் ஹெரிடேஜ் ஆட்டோ ஷோ 2018,  (ஞாயிற்றுக் கிழமை), சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடைபெறவுள்ளது. இதில் பாமையான மற்றும் புராதனமான 140க்கும் மேற்பட்ட கார்களும் 35க்கும் மேற்பட்ட இரு சக்கர வண்டிகளும் பங்குபெற உள்ளது. இந் கண்காட்சியை 9 மணியளவில் திரைப்பட நடிகர் சத்யராஜ் தொடங்கி வைக்கிறார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 1957 மாடல், டாட்ஜ் கிங்க்ஸ்வே காரும், ஏவிஎம் ஸ்டூடியோ நிறுவனர் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் 1938 மாடல், வாக்டால் காரும், ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசனின் 1956 மாடல், வாக்டால் வெலாக்ஸ் காரும் இந்த கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

இதில் சுமார் 140-க்கும் மேற்பட்ட பழமையான கார்களும், 35-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இறுதியில் சிறந்த வாகனமாக தேர்வு செய்யப்படுபவைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட இருக்கிறது.




Leave a Reply