BREAKING NEWS

செங்குன்றம் பைபாஸ் சாலையில் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்.


செங்குன்றம் பைபாஸ் சோத்துப்பாக்கம் ஜங்சனில் இருந்து வடகரை வரையிலான சர்வீஸ் சாலையோரமாக மழைநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் செங்குன்றம் பேரூராட்சி பகுதியில் இருந்து கழிவுநீர் விடப்பட்டு உள்ளது. இந்த கால்வாய் அடைப்பு ஏற்பட்டு சார்வீஸ் சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கி ஆறாக காட்சியளிக்கிறது.

இந்த சாலையில் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது மோட்டார் சைக்கிளில் செல்வோர் மீது கழிவுநீர் தெளிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர் இதனால் இந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கழிவுநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Leave a Reply