BREAKING NEWS

செக் யுவர் ரைடு மூலம் பாதுகாப்பான பயணம்

ஓட்டுனரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் ஊபர் பொது மக்களிடையே செக் யுவர் ரைட் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் உலகின் ஆறு கண்டங்களில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஊபர் வாகனத்தில் ஒவ்வொரு முறையும் பயணிகள் பயணிக்கும் போது அவர்களுக்கு இன்ஆப் நினைவூட்டல்களும், புஷ் அறிவிக்கையும் வரும். இதில் ஓட்டுனரின் நிழற்படம், உரிமத் தகடு, கார் தயாரிப்பு, மாடல் ஆகியவற்றைச் சரி பார்த்து நாம் சரியான ஓட்டுனர் ஓட்டும் சரியான வாகனத்தில்தான் பயணிக்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் ஒட்டுனரின் செயலியில் உங்கள் பெயர் தெரியும். அதேபோல் உங்கள் செயலியில் ஓட்டுனரின் பெயர் தெரியும். உங்கள் செயலியில் இருக்கும் தகவல்கல் ஒத்துப் போகவில்லை எனில் ஊபர் நிறுவனத்திடம் தகவலைத் தெரிவிக்கலாம் ஒவ்வொரு ஒற்றை முறையும் ஊபரை பயன்படுத்தி வாகனத்துக்குள் நீங்கள் ஏறுவதற்கு முன்பாகவே உங்கள் பயணத்தைச் சரி பார்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும் என்று ஊபர் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான செயல் தலைவர் கூறினார்.




Leave a Reply