BREAKING NEWS

‘சூப்பர் ஹீரோ’’ வாக ஜெய் நடிக்கும் படம்

ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘‘பிரேக்கிங் நியூஸ்‘‘ என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது..
ஜிகுனா படத்தை தயாரித்த திருக்கடல் உதயம் தயாரிக்கும் இப்படத்தை அந்நியன், முதல்வன், சிவாஜி போன்ற படங்களுக்கு விஷூவல் எபெக்ட்ஸ் துறையில் இருந்து பணியாற்றிய அண்ட்ரோ பாண்டியன் டைரக்ட்டு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பாண்டியன் கூறுகையில்,‘‘: ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஆக்ஷ்ன் படம் இது., மிக பிரமாண்டமாக பொருட்செலவில் தயாராகிறது, இதில் சண்டை காட்சிகளில் ரோபோட்ரானிக், அனிமேட்ரோனிக் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறோம் மற்றும் விஷுவல் எபெக்ட்டின் பங்கு அதிகமாக உள்ளது என்பதால் பாதி படத்திற்கு மேல் கிரீன் மற்றும் புளு மேட்டிலேயே படமாக்கி வருகிறோம்‘‘ என்றார்.
படத்தில் ஜெய் ஜோடியாக அறிமுக நாயகி பானு நடிக்க , சுறா படத்தில் வில்லனாக நடித்த தேவ்கில், வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த ராகுல் தேவ், மற்றும் ஜெ பிரகாஷ், இந்தரஜா, சந்தானா பாரதி, மோகன் ராம், பழ கருப்பையா ,பி.எல் . தேனப்பன் மானஸ்வி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவை ஜானி லாலும்,எடிட்டிங்கை அன்ட்டனியும், கலையை என்.எம். மகேசும், நடனத்தை ராதிகாவும் கவனிக்க , விஷால் பீட்டர் இசையமைக்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *