BREAKING NEWS

சூப்பர் முதல்வராக ஆளுநர் செயல்படுகிறார் – வேல்முருகன் தாக்கு.


 

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சுங்கச்சாவடி தாக்குதல் வழக்கில் ஜாமீன் பெற்று நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார்.  5-வது நாளாக அவர் கையெழுத்து போட்டார். அதன்பின் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

மோடி அரசின் சூப்பர் முதல்வராக தமிழக ஆளுநர் ஆட்சி செய்கிறார். மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எந்த லாபமும் இல்லை. பெரும் பணக்காரர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தான் லாபம் அடைந்துள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு பொதுமக்களுக்கு துரோகம் செய்து விட்டது. இதன் காரணமாக ஏ.டி.எம்.களில் காத்து கிடந்த பலர் உயிரை விட்டனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி 150 அமைப்புகளை ஒருங்கிணைந்து செயல்படுகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.




Leave a Reply