BREAKING NEWS

சுயேச்சையாக நின்று கவனம்பெற்ற அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன்

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக தலைமையை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் எம்எல்ஏ 27,456 வாக்குகள் பெற்று வைப்புத்தொகையை மீட்டெடுத்தார்.

முன்னாள் அதிமுக எம்.எல்.

கடந்த அதிமுக ஆட்சியில் விளாத்திகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ஜீ.வி. மார்க்கண்டேயன். இவர் அதற்கு முன்பு 10 ஆண்டுகள் புதூர் ஒன்றியக் குழுத் தலைவராகவும் இருந்துள்ளார்.

அதிமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர், கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். நடந்துமுடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில், விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கேட்டிருந்தார்.

சுயேட்சையாக போட்டி

ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது வெற்றிபெற்றுள்ள சின்னப்பனுக்கு கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கியது. இதனால் அதிருப்தியடைந்த ஜீ.வி. மார்க்கண்டேயன் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.

அவருக்கு காலணி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில், 27,456 வாக்குகள் பெற்ற மார்க்கண்டேயன் அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடம் பிடித்து, வைப்புத்தொகையையும் திரும்பப் பெற்றார்.

மக்கள் ஆதரவை வரவேற்கிறேன்

விளாத்திகுளம் தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், வெற்றிவாய்ப்பை இழந்தவர்களில் திமுக வேட்பாளர் ஏ.சி. ஜெயக்குமார், சுயேச்சையாகப் போட்டியிட்ட ஜீ.வி. மார்க்கண்டேயன் ஆகியோர் மட்டுமே வைப்புத்தொகையை திரும்பப் பெற்றவர்கள். மற்ற 11 வேட்பாளர்களும் வைப்புத்தொகையை இழந்தனர்.

இதுகுறித்து ஜீ.வி. மார்க்கண்டேயன் கூறுகையில், தொகுதி மக்கள் மீது நானும், என் மீது அவர்களும் வைத்திருந்த அன்பையும், நம்பிக்கையையும் உணர முடிகிறது.

மக்கள் அளித்த ஆதரவை மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வரவேற்கிறேன் என்றார்




Leave a Reply