BREAKING NEWS

சுனில் கவாஸ்கருக்குப் பிறகு தொடக்க வீரராக ஒரே டெஸ்ட்டில் 2வது சதம் ரோஹித் சர்மா சாதனை

பந்தை சிக்சருக்கு விரட்டும் ரோஹித் சர்மா, சாதனை 2வது சதம். விசாகப்பட்டிணம், இந்தியாதென் ஆப்பிரிக்கா.

விசாகப்பட்டிணம் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் பெரிய சதம் கண்ட ரோஹித் சர்மா, மீண்டும் 2வது இன்னிங்சிலும் சற்று முன் சதம் கண்டு சாதனை படைத்துள்ளார்.

சுனில் கவாஸ்கருக்குப் பிறகு எந்த ஒரு இந்திய தொடர்க்க வீரரும் ஒரே டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் கண்டதில்லை, அந்த வகையில் ரோஹித் சர்மா என்ற இன்னொரு மும்பை வீரர் சுனில் கவாஸ்கரின் சாதனையைச் சமன் செய்துள்ளா.ர்

ரோஹித் சர்மா தற்போது 146 பந்துகளில் 10 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 126 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். சற்று முன் தென் ஆப்பிரிக்க பவுலர் பியட்டை தொடர்ச்சியாக ஹாட்ரிக் சிக்சர்கள் விளாசி சிக்சர் மழை பொழிந்து வருகிறார். இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து மொத்தம் 309 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மொத்தமாக இரு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ரோஹித் சர்மா.

விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர் (மூன்று முறை 2 இன்னிங்ஸ்களில் சதம் கண்டுள்ளார்), ராகுல் திராவிட் (இருமுறை இரு இன்னிங்ஸ் சதம்), விராட் கோலி, அஜிங்கிய ரஹானே, தற்போது ரோஹித் சர்மா.

கடைசியாக 127 ரன்களில் ரோஹித் சர்மா சற்றுமுன் மஹராஜ் பந்தில் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *