BREAKING NEWS

சீன அதிபர் வருகையால் சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சீன அதிபர் வருகையால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

சீன அதிபர் வருகை

அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மிக முக்கிய பிரமுகரின் சாலை வழி பயணத்தின் போது ஜிஎஸ்டி சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை) அண்ணா சாலை (கத்திபாரா முதல் சின்ன மலை வரை) சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து போக்குவரத்து தாமதமாக செல்ல வாய்ப்புள்ளது.

நேற்று காலை 12.30 மணி முதல் 2 மணி வரை பெருங்களத்தூரிலிருந்து சென்னைக்குள் வந்த அனைத்து வாகனங்களும் ஜி.எஸ்.டி. சாலையில் அனுமதிக்கப்படாமல், ஜீரோ பாயின்ட் சந்திப்பில் இருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.

வாகனங்களுக்கு அனுமதியில்லை

சென்னை தென்பகுதியில் இருந்து வடக்கு பகுதிகளுக்கு வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக, குரோம்பேட்டை – தாம்பரம் வழியாக மதுரவாயல் புறவழிச்சாலையை பயன்படுத்தி செல்லலாம். தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் சாலையை ரேடியல் சாலையில் அனுமதிக்கப்பட்டது. மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஜி.எஸ்.டி. சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் கத்திப்பாரா சந்திப்பில் இருந்து கிண்டி நோக்கி அனுமதிக்கப்படாமல், 100 அடி சாலை வழியாக செல்ல திருப்பிவிடப்ட்டது. 2 மணி முதல் 9 மணி வரை ஓ.எம்.ஆர். நகரில் இருந்து சென்னைக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக திருப்பி விடப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் வந்த அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படவில்லை.

போக்குவரத்து மாற்றம்

பெரும்பாக்கம் வழியாக நாளை 07.30 முதல் 2 மணி வரை ஓ.எம்.ஆர்.லிருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக திருப்பி விடப்படும். மேலும் 7 மணி முதல் 1.30 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. சீன அதிபரின் வருகையால் சென்னையில் மேற்கொண்ட போக்குவரத்து மாற்றத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *