BREAKING NEWS

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஆளில்லா விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள மோஸி 2 ஆளில்லா விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது. இது சூரிய சக்தியால் இயங்கக் கடியது .

இந்த விமானம் முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்கக்கூடியது என்பதே இதன் சிறப்பாகும். ஷாங்காயில் உள்ள OXAI ஏர்கிராஃப்ட் கோ லிமிடெட் என்ற நிறுவனம், இந்த ஆளில்லா விமானத்தை தயாரித்துள்ளது. இதன் சோதனை ஓட்டமானது, கிழக்கு சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள டெக்கிங் பகுதியில் அமைந்துள்ள மோகன்ஷான் விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் பொது மேலாளர் மாவோ யிக்கிங், இந்த ஆளில்லா விமானம் 15 மீட்டர் நீள இறக்கையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், இது முழுக்க முழுக்க சூரிய மின்கலங்களால் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த விமானத்தால் அதிகபட்சமாக 8,000 மீட்டர் உயரத்தில் பறக்க முடியும். எட்டு மணி நேரம் சூரிய ஒளியில் சார்ஜ் செய்த பின்னர், இரவு நேரங்களில் 12 மணி நேரம் வரை குறைந்த வேகத்தில் பயணம் செய்யலாம்.

5ஜி சேவை வழங்குபவர்களுடன் இணைந்து இவ்விமானத்தின் செயல்பாடுகளை மேலும் விரிவுப்படுத்தவுள்ளோம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் இந்த ஆனில்லா விமானமானது பேரழிவு காலங்களில் நிவாரணப் பணிகள், உளவு மற்றும் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Leave a Reply