BREAKING NEWS

சீனாவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் முயற்சி

சீனாவில் சமீபத்தில் கட்டமைக்கப்பட்ட கண்ணாடிப் பாலம் விளக்கொளியால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 5-ம் தேதி குவாங்டாங்கில் 1843 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி பாலம் திறக்கப்பட்டது.

இரு டென்னிஸ் மட்டைகளை குறுக்கே நிறுத்தியது போல் உள்ள அந்த பாலம் தரைமட்டத்தில் இருந்து 1640 அடி உயரம் கொண்டதாகும். இதை தொடர்ந்து மலை முகட்டில் இருந்து 1207 அடி தூரம் நீட்டிக் கொண்டு மாலையில் சூரியன் மறையும் காட்சியை ரசிக்க உதவும் கண்ணாடிப் பாலம் வெகு சீக்கிரத்தில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்த பாலத்தின் மேல் நின்று சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

இதனை தொடர்ந்து அப்பாலத்தின் மேல் நடப்பது புதுமையாகவும், சுவாரசியமாக இருப்பதாகவும், விளக்கொளிகள் கண்களுக்கு விருந்தாக உள்ளதாகவும் அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். அங்கு இரண்டாயிரம் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் கண்ணாடிப் பலமானது காண்போரை கவரும் வண்ணம், வண்ண விளக்குகளால் ஜொலித்தது.

அவ்வப்போது நிறங்கள் மாறி காட்டிய வர்ணஜாலம் காண்போரை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த பாலத்திற்கு சீன மொழியில் சொர்க்கத்தின் கதவுகள் என பெயரிடப்பட்டுள்ளது. அந்த கண்ணாடி பாலத்தில் ஆடை அலங்கார அணிவகுப்புகளும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply