BREAKING NEWS

சீனாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் ஒரே நாளில் சுமார் 38 ஆயிரம் பன்றிகள் கொன்று புதைக்கப்பட்டன.



 

பன்றிக் காய்ச்சல்

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்னும் கொடிய வகை தொற்றுநோய் சீனாவில் சமீபத்தில் பரவியது. கடந்த மாதத்தில் இங்கு உள்ள 5 மாகாணங்களில் 5 பேர் இந்நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், நோய் பாதித்துள்ள மாகாணங்களில் இருந்து இறைச்சிக்காக பன்றிகளை பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. பன்றி இறைச்சி விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

38 ஆயிரம் பன்றிகள்

இந்நிலையில், பன்றிகள் மூலமாக வேகமாக பரவும் இந்த நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் இங்கு உள்ள லியாவ்னிங், ஹேனான், ஜியான்சு. ழேஜியாங் மற்றும் அன்ஹுய் மாகாணங்களில் சுமார் 38 ஆயிரம் பன்றிகள் நேற்று முன்தினம் ஒரேநாளில் கொன்று புதைக்கப்பட்டன.




Leave a Reply