BREAKING NEWS

சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு: தமிழக அரசுக்கு சரத்குமார் நன்றி.

 

அரசுவிழா

முதல்வர் எடப்பாடி பழனசாமி நேற்று சட்டசபையில், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். இதற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் சிவாஜியின் குடும்பத்தினர் உள்பட பலர் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், பல்வேறு தரப்பினர் இந்த அறிவிப்புக்காக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சரத்குமார் நன்றி

தமிழ் மக்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும், தமிழ்த்திரையுலகிற்கு உலக அளவில் பெருமை சேர்த்திருக்கும் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு நன்றி. பல உயர்ந்த கதாபாத்திரங்களின் மூலமாக தேச பக்தியை மக்களுக்கு இன்று வரை உணர்த்திக் கொண்டிருக்கும், ஒரு கலைஞனின் பிறந்தநாள் எதிர்வரும் தலைமுறையினரும் கொண்டாட வேண்டிய அவசியத்தை புரிந்து இந்த நல்ல செய்தியை அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

இவ்வாறு அவர் ெதரிவித்துள்ளார்.




Leave a Reply