BREAKING NEWS

சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.

சென்னையில் நடைபெற உள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான தீபம் ஏற்றப்பட்டது.

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஆகஸ்ட் 4 முதல் 6 ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெற உள்ளது. இதில் பாகிஸ்தான், சீனா, மலேசியா உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த 1525 வயதுக்குட்பட்ட 12 ஆடவர் மற்றும் 8 பெண்கள் அணியினர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்துவ கல்லூரியில் இதற்கான ஒலிம்பிக் ஜோதியை நடிகர் அருண்விஜய் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டார்.

வரும் 3-ம் தேதி நடைபெற உள்ள இதன் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜூ, இசையமைப்பாளர் இளையராஜா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் என பலர் கலந்து கொள்கின்றனர்.




Leave a Reply