BREAKING NEWS

சியோமியின் புதிய ரெட்மி டி.வி. இந்திய அறிமுகம்

சியோமி நிறுவனம் புதிய அம்சங்களுடன் கூடிய ரெட்மி டி.வியை இந்தியாவில் வெளியிடும் தேதியை டீசராக வெளியிட்டுள்ளது.

சியோமி நிறுவனம் சமீபத்தில் சீனாவில் முதல் ரெட்மி டி.வியை அறிமுகப்படுத்தியது. சியோமி அறிமுகப்படுத்தியுள்ள இந்த 70இன்ச் அளவிலான ரெட்மி டி.வி., ‘ரெட்மி டி.வி 70இன்ச்’ எனப் பெயரிடப்பட்டது. இந்த டிவி 4கே தரம், ஹெச்.டி.வி வசதி, குவாட்கோர் ப்ராசஸர், பேட்ச்வால் என பல அம்சங்களை கொண்டுள்ளது.

ரெட்மி டி.வி. மட்டுமின்றி இந்த அறிமுக நிகழ்வில் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போன்கள், புதுப்பிக்கப்பட்ட ரெட்மி புக் 14 லேப்டாப் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவில் இந்த 70இன்ச் ரெட்மி டி.வி. செப்டம்பர் 3ல் இருந்து ரூ.38,000 விலையில் விற்பனை ஆகி வருகிறது.

இந்த டி.வியின் இந்திய அறிமுக தேதி வெளியிடப்படாமல் இருந்த நிலையில், சியோமியின் அதிகாரப்பூர்வ இந்திய ட்விட்டர் கணக்கில் டி.வி. தோன்றுவதைக் காட்டும் டீசரைப் பகிர்ந்துள்ளது.

மேலும் செப்டம்பர் 17-ம் தேதி ‘ஸ்மார்ட்டர் லிவிங் 2020′ வெளியீட்டு தேதியை முக்கியமாக குறிப்பிட்டுள்ளது. சியோமி இன்னும் இந்த புதிய தயாரிப்பின் பெயரை வெளியிடவில்லை.

அந்த டீசரில் காட்டப்படும் படம், மெல்லிய பெசல்களைக் கொண்ட டி.வி, ரெட்மி 70யாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கணக்கின் மற்றொரு ட்வீட்டில், இந்த மாத இறுதியில் பல ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிவித்துள்ளது.




Leave a Reply