BREAKING NEWS

சினிமா எனது தொழில் அரசியலுக்கு இடைஞ்சலாக இருந்தால் நடிப்பதை நிறுத்துவேன் – கமல்ஹாசன் பேட்டி.

 

விஸ்வரூபம்

கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம்-2 படம் ஆகஸ்டு 10-ந் தேதி வெளியாகிறது. இது தொடர்பாக கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

விஸ்வரூபம்-2 படம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. நாடு இரண்டாக பிரிந்து கிடப்பதற்கு மத அரசியல் காரணம். அதில் எனக்கு வருத்தம் உண்டு. இந்த படத்தின் கதை உருவாக காரணம் அந்த வருத்தம்தான். 2007-ம் ஆண்டுக்கு முன்பு விஸ்வரூபம்-2 கதை எழுதப்பட்டது. அப்போது தசாவதாரம், மன்மதன் அம்பு என்ற கோணத்தில் பயணித்ததால் அப்போது எடுக்க முடியவில்லை.

தீவிரவாதிகள்

அமெரிக்கா தரப்பிலும், தீவிரவாதிகள் தரப்பிலும் தவறு இருக்கிறது என்ற ரீதியில்தான் படத்தை எடுத்துள்ளேன். படத்தில் அரசியல் கட்சி கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தவில்லை. அதற்கு வேறு மேடைகள் உள்ளன.

எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த காலத்தில் தொழில் நுட்பம் கிடையாது. அதனால் அவர் தனது படங்களில் கட்சி கொடி, சின்னத்தை காட்டினார்.

விஸ்வரூபம்-2 படத்திற்கு எதிர்ப்பு வராது என்று நினைக்கிறேன். அப்போது வந்த எதிர்ப்பு அரசியல் ரீதியானது. இப்போது படத்தை எதிர்க்கும் கெட்டிக்காரத்தனம் யாருக்கும் இல்லை.

கடைசி படம்

விஸ்வரூபம்-2 எனது கடைசி படம் அல்ல. கட்சி பணியில் இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். அரசியலுக்காக சினிமா சம்பாத்தியத்தை தியாகம் செய்யமாட்டேன். இது என் தொழில். இதை செய்தால் தான் பிழைப்பு நடத்த முடியும். சும்மா ஒரு ரூபாய் வாங்கி கொண்டு சேவை செய்கிறேன் என்றெல்லாம் உட்டாலக்கடி செய்ய முடியாது.

அரசியலில் இருக்க வேண்டும் என்றால் பணம் வேண்டும். இங்கு யாரும் தியாகங்கள் செய்ய வரவில்லை. எம்ஜிஆர் கூட எம்.எல்.ஏ ஆன பிறகும் படங்களில் நடித்து கொண்டே இருந்தார். நானும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். எப்போது எம்.எல்.ஏ என ஒரு பதவி வருகிறதோ அப்போது தேவைபட்டால் நடிப்பதை நிறுத்தி கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply