BREAKING NEWS

சிங்கப்பூரில் தமிழர்கள் கட்டிய மாரியம்மன் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி புத்தர் ஆலயம், மசூதியையும் பார்வையிட்டார்.

அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி கடைசி நாளான நேற்று, அங்குள்ள இந்து, புத்த கோவில்கள் மற்றும் மசூதிக்கு சென்று பார்வையிட்டார்.

அரசு முறை பயணமாக இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோடி, கடைசி நேளான நேற்று சிங்கப்பூரி உள்ள பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றார்.

சீனா டவுன் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்ற மோடி அங்கு தரிசனம் செய்தார். இந்த கோவில் கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் இருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த தமிழர்களால் 1827-ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாதஸ்வரம், மேளம் முழங்க கோயில் நிர்வாகிகள் மோடிக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, சூலியா எனப்படும் மசூதிக்கு சென்று பார்வையிட்ட அவர், பச்சை நிற போர்வை ஒன்றை மசூதிக்கு பரிசாக வழங்கினார். இது இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த சூலியா முஸ்லிம் வணிகர்களால் கட்டப்பட்டது.

இறுதியாக, புத்தரின் பல் புனிதச் சின்னமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள புத்தர் ஆலயத்துக்குச் சென்ற மோடி அங்கு அழகிய வேலைப்பாடுகாளால் உருவாக்கப்பட்டிருந்த கோவிலின் கட்டமைப்பை பார்த்து ரசித்தார். அங்குள்ள புத்த துறவிகளுடன் உரையாடினார்.




Leave a Reply