BREAKING NEWS

சாலை விபத்தில் சிக்கும் பெண் பற்றிய கதை ‘குஸ்கா’

எஃப் எம் கலைக்கூடம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பி என் சி கிருஷ்ணா இயக்கத்தில், கே பாக்கியராஜ், ரேகா நடிப்பில் ‘குஸ்கா’
எஃப் எம் கலைக்கூடம் சார்பாக எஸ் நாராயணன் மற்றும் எஸ் சரவணகுமார் தயாரிக்கும் படம் ‘ குஸ்கா’’
சாலை விபத்தில் சிக்கிக் கொள்கின்ற ஒரு பெண்ணுடைய வாழ்வை பற்றி உணர்வுபூர்வமான சொல்லும் கதை இது.
இப்படத்தில், நாயகனாக கிஷோர் அறிமுகமாக, இணையாக சஸ்வதா நடிக்கிறார்.
இவர்களுடன் இயக்குனர்- பாக்யராஜ், ரேகா, மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக இயக்குனர் பி என் சி கிருஷ்ணா கதை வசனம் எழுதி இயக்குகிறார்.
இத்திரைப்படத்தில் கிஷோர் – சஸ்வதா ஜோடியுடன் கே பாக்கியராஜ், ரேகா, அப்புக்குட்டி, டி பி கஜேந்திரன், அனுமோகன், மயில்சாமி, மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி, வெங்கல் ராவ், முல்லை தனசேகர், கோதண்டம், அம்பானி சங்கர், சேலம் சுமதி, அண்ணாதுரை கண்ணதாசன், படத்தின் இயக்குனர் கிருஷ்ணா, ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக ஜெரால்ட் நடித்திருக்கிறார்.
எம் எஸ் ராஜா ஒளிப்பதிவு செய்ய, ஆர் ஜி ஆனந்த் படத்தொகுப்பை கவனிக்க, கலையை கே கலை நடராசும்,.சண்டைகாட்சி யை ஓம் பிரகாசும், நடனத்தை ஜே ஜே சந்துருவும், கவனிக்கிறார்கள்.வடிவமைப்பு: கம்பம் சங்கர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *