BREAKING NEWS

சாதனை படைக்கும் விஜய் பாடிய பாடல்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘‘பிகிலு‘‘ இப்படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடியுள்ள ‘‘வெறித்தனம்..‘‘ என்ற பாடல் செப்டம்பர் 1-ந் தேதி வெளியானது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தபாடல் வெளியான சில நிமிடங்களிலே டிரண்டானது. இப்பாடல் ஒரு நாளில் அதிகம் லைக் செய்யப்பட்ட லிரிக்கில் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் வெளியான 24 மணிநேரத்தில் உலகளவில் யூடியூப்பில் அதிகம் பார்க்கபட்ட வீடியோக்கள் பட்டியலில் வெறித்தனம் பாடல் 45 லட்சம் பார்வையாளர்களை கடந்து 4-வது இடத்தை பிடித்தது.
இப்படி அடுக்கடுக்கான சாதனைகளை படைத்து வரும் வெறித்தனம் பாடல், தற்போது மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. வெறித்தனம் பாடல் இதுவரை 1.2 கோடி பேர் பார்த்துள்ள இப்பாடல் 10 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. இதன்மூலம் அதிவேகமாக 10 லட்சம் லைக்குகளை பெற்ற லிரிக்கில் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது.




Leave a Reply