BREAKING NEWS

சவூதி அரேபியா முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்குகிறது

எண்ணெய் பொருளாதாரத்தை மட்டும் நம்பி இல்லாமல் சவூதி அரேபியா முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க உள்ளது.

சவூதி அரேபியா முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்கப்போவதாக கூறி உள்ளது. தனது பொருளாதாரத்தை எண்ணையை மட்டும் நம்பி இருப்பதில் இருந்து விலக்கி வைப்பதற்கான உந்துதலின் ஒரு பகுதியாக சுற்றுலா விசாக்கள் வழங்க உள்ளது.

இந்த சுற்றுலா திட்டம் என்பது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் விஷன் 2030 சீர்திருத்த திட்டத்தின் மையப்பகுதிகளில் ஒன்றாகும்.

சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது ஆள் இல்லா விமான தாக்குதல் நடைபெற்றது. உலகளாவிய எரிசக்தி சந்தைகளை உலுக்கிய இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா இரானை குற்றம்சாட்டியது. பேரழிவுகரமான இந்த தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு தற்போது இந்த சுற்றுலா விசா அறிவிப்பு வந்துள்ளது.

சுற்றுலாவை உக்குவிக்கும் முயற்சியில் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் கலந்துகொள்ள பார்வையாளர்களுக்கு கடந்த ஆண்டு சவுதி அரேபியா விசா வழங்கத் தொடங்கியது.

இது குறித்து சுற்றுலாத் தலைவர் அகமது அல் கத்தீப் கூறியதாவது:-

சவூதி அரேபியாவை சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்குத் திறப்பது நம் நாட்டுக்கு ஒரு வரலாற்று தருணம் ஆகும்.

இங்கு வந்தால் “பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொக்கிஷங்களால் ஐந்து யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன.

ஒரு துடிப்பான உள்ளூர் கலாச்சாரம் மற்றும் ஆச்சரியப்படக்கூடிய இயற்கை அழகு உள்ளன.

சவுதி அரேபியா வெளிநாட்டு பெண்களுக்கான அதன் கடுமையான ஆடை கட்டுப்பாட்டை எளிதாக்கும். சவூதி பெண்களுக்கு பொது உடைகள் கட்டாயமாக இருக்கும் உடல் மூடிய அபயா அங்கி இல்லாமல் அவர்களை செல்ல அனுமதிக்கிறது.

எவ்வாறாயினும், வெளிநாட்டு பெண்கள் “அடக்கமான ஆடைகளை” அணிய வேண்டும்” . இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *