BREAKING NEWS

சரியும் ரஜினி செல்வாக்கு – எந்திரன்-2 தேறுமா? ரசிகர்கள் கலக்கம். 

ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு பின்னர் வெளியான காலா படம் படுதோல்வியை சந்தித்து உள்ளது. இந்த நிலையில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள அவரின் அடுத்த படமான எந்திரன் 2 குறித்த கவலை அவரின் ரசிகர்கள் மனதில் தொற்றி உள்ளது.

அரசியல் வெற்றிடம்

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகியது. இந்த நிலையில் தி.மு.க., தலைவர் கருணாநிதியும் உடல்நலக்குறைவு காரணமாக முடங்கி போய் உள்ளது. இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி உள்ளது நிதர்சனமே.

இதனை நன்றாக புரிந்து கொண்ட சிலர், தமிழக அரசியல் களத்தில் புதிது புதிதாக புகுந்தனர். அவ்வாறே அரசியலுக்குள் கால் வைத்தவர்கள்தான் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும். ஒருவர் உலக நாயகன் என்றும் மற்றொருவர் சூப்பர் ஸ்டார் என்றும் சினிமா ரசிகர்களால் அறியப்படுபவர்கள்.

ரஜினி, கமல்

இவர்கள் ரசிகர்கள் வேண்டும் என்றால் எதிரியாக இருக்கலாம், ஆனால் இவர்கள் என்றுமே நல்ல நண்பர்கள். சினிமா, காசுக்காக அடிப்பது போன்று அடிப்பார்கள். அத்துனையும் நடிப்பு. ஆரம்ப காலத்தில் இருவரும் ஒன்றாக நடித்தாலும், அடுத்தடுத்த படங்களில் தனித்தனியே நடித்தனர்.

இருவரின் மார்க்கெட் மற்றும் சம்பாத்தியம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டே பிரிந்து சென்றதாக அவர்கள் நட்புக்கு புது இலக்கணம் வகுத்து கொடுத்தனர். இந்த நிலையில் ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் உடல்நலக்குறைவு இவர்களுக்கு கட்டுக்கடங்காத தைரியத்தை கொடுத்து விட்டது.

திடீர் அவ(ரி)தாரம்

ஜெயலலிதா என்னும் ஆளுமை உயிருடன் இருக்கும் போது இவர்கள் பொட்டிப் பாம்பாக அடங்கியே கிடந்தனர். சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் வாய் திறந்ததே கிடையாது. என் சொத்தை எல்லாம் இழந்தாலும், கையில் கடைசியாக ஒரு ரூபாய் இருந்தாரும், பேப்பர், பென்சில் வாங்கி திரைக்கதை எழுதி பிழைத்துக் கொள்வேன் என்றவர் கமல்ஹாசன்.

அப்படி இருக்க ஒருவருக்கு தற்போது சிஸ்டம் சரியில்லாமல் தெரிகிறது. மற்றொருவருக்கும் அதே நிலைமைதான். இவரின் அரசியல் வாழ்க்கை குறித்து தீர்மானிக்கும் நிலையில் வாக்காளர்களாகிய மக்கள் உள்ளனர். இவர்களின் புதிய அவ(ரி)தாரம் எப்படி? என்பதை ஜனநாயகத்தின் எஜமானர்களாகிய மக்களிடையே விட்டு விடுவோம்.

காலா தோல்வி

‘‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’’ என்று கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி உரையாற்றியதும், ஆர்ப்பரிப்பு விசில் சப்தம் அடங்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் மண்டபத்தில் சிங்கம் ஒன்று புறப்பட்டதே என்ற பாடல் ஒலிக்க ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டார்.

அதே வேகத்தில், தற்போது காலா வெளியானது. காலா படத்தின் இசை வெளியீடை கட்சி மாநாடு போலவே நடத்தினர். இந்த நிலையில் காலா படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அந்த படம் வணிக ரீதியாகவும் தோல்வியை தழுவி உள்ளது.

முதல் தோல்வி

காலா வெளியான போது, பெரிய அளவிலான மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் கூட ரஜினி படத்தால் வெற்றி பெறமுடியவில்லை. தூத்துக்குடி போராட்டத்தில் அவர் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது போன்று பேசினார். இது அரசியலில் அவர் பயணிக்க போகும் பாதையை தெளிவாக்கியது. இந்த நிலையில் ரஜினிகாந்த் படம் தோல்வி அடைந்து உள்ளது.

கபாலி படம் 3 ஆயிரம் தியேட்டர்களில் வெளியான நிலையில், காலா படத்திற்கு 1700 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்தது. இது ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின்னர் கிடைத்த முதல் தோல்வி. தற்போது அடுத்த தோல்வியை படம், பிளாப் ஆகி விட்டது.

திரைஉலகினர் கருத்து

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2 விரைவில் வெளியாக உள்ளது. கமல்ஹாசனை பொறுத்தமட்டில் சினிமாவை போன்று அரசியலும் முந்திக் கொண்டார். அவரும் தற்போது அரசியலில்தான் இருக்கிறேன். என் கோபத்தை டுவிட்டரில் காட்டுகிறேன் என்று பதிவுகள் மூலமாக வாழ்கிறார்.

இதுகுறித்து திரை உலக பிரமுகர்கள் கூறும்போது, ரஜினிகாந்த் மட்டும் அல்ல, விஜயகாந்த் மற்றும் சரத்குமார் ஆகியோரின் அரசியல் வருகையை தொடர்ந்து, அவர்களின் படங்களும் வசூலில் சொதப்பியது. அதே நிலைமைதான் தற்போது ரஜினிக்கு ஏற்பட்டு உள்ளது. என்கின்றனர்.

செல்வாக்கு சரிவு

ரஜினிகாந்த்தின் அடுத்த படமாக மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள எந்திரன்2 வெளியாக உள்ளது. கடந்த காலங்களை போன்று, இந்த படத்திற்கு நஷ்டஈடு கொடுக்கும் நிலை ரஜினிகாந்துக்கு ஏற்பட்டால், அவரின் அரசியல் வாழ்க்கை என்னாகும் என்ற கவலை அவரின் ரசிகர்கள் மனதில் தொற்றிக் கொண்டு உள்ளது.

ஆக அரசியல் வருகைக்கு பின்னர், ரஜினி செல்வாக்கு சரிந்து வருகிறது என்பதே நிதர்சனம். கமல்ஹாசன் நிலை என்பதை என்பதை விஸ்வரூபம் 2 காட்டிக் கொடுத்து விடும். முஸ்லிம்களை தாக்கி படமெடுக்க நான் என்ன பி.ஜே.பி.யா? என்று கமல்ஹாசன் கேட்பதும், அதிகார வர்த்தகத்திற்கு ஆதரவாக நிஜத்தில் நடந்து, நிழலில் (படசுருளில்) ஒடுக்கப்பட்டோருக்காக பொன், பொருள், உயிர் என கொடுப்பதும் சினிமா அரசியல்.

————
Leave a Reply