BREAKING NEWS

சபாஷ் நாயுடு படத்தின் டைட்டிலில் சாதிப்பெயர் – கமல் விளக்கம்.

 

 


சாதியில்லாமல் என் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தேன் என்று கமல்ஹாசன் கூறியிந்த நிலையில், அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் டைட்டிலில் சாதிப்பெயர் இருப்பது குறித்து கமல் விளக்கியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.

இப்போது முன்னைவிடத் தெம்பாகவும் புரிந்தநிலையிலும் இருக்கிறேன். அது அரசியல் இடையூறுதான். யாரோ செய்யும் தொழிலில் நான் புகுந்துவிட்டதாக நினைத்து விட்டார்கள். நியாயமான வருமானம் வேண்டுமென்றால் தியேட்டர்களின் எண்ணிக்கை கூடவேண்டும். ஆந்திராவில் எல்லாம் அப்படித்தான். ஆனால் கள்ள மார்க்கெட் அது இது என்று சலவை செய்யும் இடமாகத் தமிழ் சினிமா இருப்பதை நான் விரும்பவில்லை.

சபாஷ் நாயுடு 40 சதவீதம் முடிஞ்சி உள்ளது டைட்டிலை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எம்.ஆர்.ராதா சாதிக்கெதிரா அத்தனை பேசினவர். ஆனால் சாதிப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு தான் வசனமே வைப்பார். பேர் வெச்சதாலேயே அதைக் கொண்டாடறதா அர்த்தமில்லை. நான் அரசியலுக்கு வர்றது ‘ஹேராம்’லயே ஆரம்பிச்சது. ஆபத்து வருது, ஆபத்து வருதுன்னு ஒரு கட்டியம் கூறுதல் அதுல நடந்திருக்கும். அதுதான் இப்ப நடந்துட்டிருக்கு.




Leave a Reply