BREAKING NEWS

சந்திரயான்-2, நிலவின் தெற்கு பகுதியில் இறங்க இருப்பது மிகப்பெரும் சாதனை

சந்திரயான்-2, நிலவின் தெற்கு பகுதியில் இறங்க இருப்பது மிகப்பெரும் சாதனை என்று நாசா முன்னாள் விஞ்ஞானி டான் தாமஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக நிலவின் மேற்பரப்பு படங்கள் அனுப்பியுள்ளது. சந்திரயான்-2 விண்கலம். சுமார் 4,375 கி.மீ உயரத்தில் இருந்து எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நிலவில் இருக்கும் பள்ளங்களை இந்த படம் விரிவாக காட்டுகிறது.

இந்நிலையில், சந்திரயான்-2, நிலவின் தெற்கு பகுதியில் இறங்க இருப்பது மிகப்பெரும் சாதனை என்று நாசா முன்னாள் விஞ்ஞானி டான் தாமஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். வெற்றிகரமான திட்டத்தை இந்தியா செயல்படுத்தி இருப்பதாகவும் டான் தாமஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாட்களில், சந்திரயான்-2 தன்னை நிலவுக்கு நெருக்கமாக கொண்டு வருவதற்கான தொடர் செயல்பாடுகளை நிகழ்த்தும். செப்டம்பர் 2-ம் தேதி, லேண்டர் விக்ரம் சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிந்து சந்திரனைச் சுற்றி அதன் சொந்த சுற்றுப்பாதையில் இறங்கும்.

இறுதியாக செப்டம்பர் 6-ம் தேதி, சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் இறங்கி, ஆறு சக்கர ரோவர் பிரக்யானை விடுவிக்கும், இது சந்திர மேற்பரப்பில் சுமார் 14 பூமி நாட்கள் அளவுக்கு சுற்றி வரும்.




Leave a Reply