தற்போதைய செய்திகள்

சசிகலாவை அக்கா என அழைக்க மாட்டேன் திவாகரன் அதிரடி பேட்டி

சசிகலாவை அக்கா என அழைக்க மாட்டேன்
திவாகரன் அதிரடி பேட்டி
மன்னார்குடி. 

இனி சசிகலா பெயரை பயன்படுத்த மாட்டோம். அவரை நான் அக்கா என்று அழைக்க மாட்டேன் என்று திவாகரன் தெரிவித்து உள்ளார்.

நோட்டீஸ்

சசிகலாவின் தம்பி திவாகரன் அம்மா அணி என்ற பெயரில் புதிய அணியை தொடங்கி கட்சி அலுவலகத்தை மன்னார்குடியில் உள்ள தனது சொந்த இடத்தில் திவாகரன் திறந்தார். இந்தநிலையில், சசிகலா தனது வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் மூலம் திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருந்ததாவது:

என் கட்சிக்காரரின் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த வகையிலும் தாங்கள் பயன்படுத்தக் கூடாது என்பதை சட்ட அறிவிப்பின் வாயிலாக என் கட்சிகாரர் தெரிவிக்கிறார். எனது அக்கா, என் உடன் பிறந்த சகோதரி எனும் உரிமையை கோரி தாங்கள் எனது கட்சிக்காரரை பற்றி ஊடகங்களில் பேசிவருவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். என்று அதில் கூறப்பட்டிருந்தது.

ஆலோசனை

இந்த விவகாரத்தில் அடுத்ததாக என்ன செய்யலாம் என தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். மன்னார்குடியில் நேற்று திவாகரன் அதிரடியாக பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

நாங்கள் இனி சசிகலா பெயரை பயன்படுத்த மாட்டோம். அம்மா அணி என்ற பெயரிலேயே செயல்படுவோம். இனி அவரை நான் அக்கா என்று அழைக்க மாட்டேன். அவருக்கு நான் தம்பி இல்லை. சிறையில் இருக்கும் சசிகலாவின் புகழை என்னைக்கொண்டே கெடுக்க நினைக்கிறார் தினகரன். இனி நான் திருமதி சசிகலா பற்றி பேச மாட்டேன். அதே நேரத்தில் பொதுவாழ்வில் உள்ளவர்களை விமர்சிக்கலாம். யாரையும் தரக்குறைவாகத்தான் விமர்சிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply