BREAKING NEWS

சசிகலாவுடன் டி.டி.வி தினகரன் சந்திப்பு.


 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பெங்களூரு சென்று சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து பேசினார். அவருடன் வழக்கறிஞர்கள்அசோகன், சுரேஷ் மற்றும் சசிகலாவின் நேர்முக உதவியாளர் கார்த்திக் ஆகியோர் உடன்சென்றனர்.

18 எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மற்றும் அதன் அடிப்படையில் எழுந்துள்ள சூழ்நிலை குறித்து எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. மற்றும் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் குறித்து சசிகலாவுடன் எடுத்துக் கூறியதாக தெரிகிறது.

சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்ய லஞ்சம் வழங்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து புகழேந்திக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பிய பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.




Leave a Reply