BREAKING NEWS

கோவிலூர் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

காரைக்குடி அருகே கோவிலூரில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தின் மின் மாற்றியில் நேற்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.தீ விபத்துசிவகங்கை மாவட்டம், தீ விபத்து நேரிட்ட துணை மின் நிலையத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செல்லும் பகுதிகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். உடனடியாக தீ கட்டுப்படுத்தப்பட்டதால், அருகே இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மின்மாற்றிகள் தப்பின.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *