BREAKING NEWS

கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து புறப்பட்டது.

 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள்போட்டி மற்றும் 5 டெஸ்டில் விளையாடுவதற்காக இன்று இங்கிலாந்து புறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள்போட்டி மற்றும் 5 டெஸ்டில் விளையாடுகிறது. இதற்காக விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று டெல்லியில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டது.

ஜூலை் 3-ந் தேதி டி20

இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் 20 ஓவர் போட்டி ஜூலை 3-ந் தேதி நடக்கிறது. ஜூலை 12-ந் தேதி ஒருநாள் தொடரும், ஆகஸ்ட் 1-ந் தேதி டெஸ்ட் தொடரும் தொடங்குகிறது. இங்கிலாந்துடன் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. வருகிற 27 மற்றும் 29-ந்தேதிகளில் டுப்ளின் நகரில் இந்த போட்டிகள் நடக்கிறது.

இந்திய நேரப்படி இரவு 8.30 போட்டிகள் மணிக்கு தொடங்குகிறது.இந்திய அணி இங்கிலாந்துடன் மோதும் போட்டி விவரம் வருமாறு:

ஜூலை.3: முதல் 20 ஓவர் போட்டி (மான்செஸ்டர்) இரவு 10.00 மணி.ஜூலை.6: இரண்டாவது 20 ஓவர் போட்டி (கார்டிப்)- இரவு 10.00 மணி.ஜூலை.8: மூன்றாவது 20 ஓவர் போட்டி (பிரிஸ்டல்) மாலை 6.30 மணி.ஜூலை.12: முதல் ஒருநாள் போட்டி (நாட்டிங்காம்) மாலை 5 மணி.ஜூலை.14: இரண்டாவது ஒருநாள் போட்டி (லண்டன்) மாலை 3.30.ஜூலை.17: கடைசி ஒருநாள் போட்டி (லீட்ஸ்) மாலை 5 மணி.ஆகஸ்ட் 1-5: முதல் டெஸ்ட் (பர்மிங்காம்).ஆகஸ்ட் 9-13: இரண்டாவது டெஸ்ட் (லார்ட்ஸ்).ஆகஸ்ட் 18-22: மூன்றாவது டெஸ்ட் (நாட்டிங்காம்)ஆகஸ்ட் 30-செப்.3: நான்காவது டெஸ்ட் (சவுத்தம்டன்)செப் 7-11: கடைசி டெஸ்ட் (ஓவல்)டெஸ்ட் போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.




Leave a Reply