BREAKING NEWS

கொந்தளித்த குஷ்பு: ஆதரவளித்த ராதிகா

நடிகை குஷ்புவும் இயக்குனர் சுந்தரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என இரு மகள்கள் உள்ளனர். மகள் அனந்திகாவுடன் தீபாவளி கொண்டாடிய குஷ்பு
மகளுடன் இருக்கும் படத்தை தனது வலை தளத்தில் வெளியிட்டார். அதை பார்த்த ஒரு ரசிகர் குஷ்பு மகள் பற்றி கிண்டலடித்து கருத்து வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த குஷ்புவுக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது.
கிண்டலடித்தவனுக்கு பதிலாக ‘‘பன்னி.. முதல்ல உன் மூஞ்சியை கண்ணாடியில பாரு. நாய் கூட பார்க்காது. வாந்தி எடுத்துட்டு போயிடும்….பிளடி..’’ என சாடியுள்ளார்.
.. குஷ்புவின் இந்த கொந்தளிப்பிற்கு நடிகை ராதிகாவும் ஆதரவாகப் பதிவிட்டிருந்தார்.
அந்த நபரை ‘இன்டெர்நெட் சைக்கோஸ்’ என்ற ராதிகா கெட்ட வார்த்தையில் மறைமுகமாகத் திட்டியிருந்தார்.
இப்படிப்பட்ட அநாகரீகமான பதிவுகளைச் செய்யும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *